June 20, 2017
'நானே களமிறங்குகிறேன்'- டி.டி.வி. தினகரன் திடீர் ஆவேசம்
'
பிரிந்திருக்கும் அ.தி.மு.க அணிகளை ஒன்றிணைக்க, விரைவில் நானே களமிறங்குவேன்' என டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
'அ.தி.மு.க அணிகளை ஒன்றிணைக்க இன்னும் 60 நாள்களில் ஈடுபடுவேன்' என அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகரிலுள்ள தன் இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தினகரன், 'நான் சுமார் 40 நாள்களாக திகார் சிறையிலிருந்து தற்போது வெளியேவந்துள்ளேன். சிறையிலிருந்த காலத்தில், பிளவுபட்டுக்கிடக்கும் அ.தி.மு.க அணிகளை ஒன்றிணைப்பதற்கான எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அ.தி.மு.க.வில் இதுவரை ஒன்றிணைவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இத்தனை நாள்கள் அதற்காகத்தான் காத்திருந்தேன். இன்னும் 60 நாள்கள் காத்திருப்பேன். அதற்குள் கட்சியின் இணைப்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால், ஒரு கட்சித் தொண்டனாக நானே நேரடியாகக் களத்தில் இறங்கி, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் தேவையான நடவடிக்கையை மேற்கொள்வேன்' எனக் கூறினார்.
'நானே களமிறங்குகிறேன்'- டி.டி.வி. தினகரன் திடீர் ஆவேசம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.