இந்த நவீன உலகின் அறிவியல் வளர்ச்சி, இணையதள பயன்பாடு அனைத்தும் பயன்படுத்தி மேற்கத்திய நாட்டினரே தங்களது பொருட்களை உலகம் முழுவதும் சந்தைப்படுத்திவருகின்றனர்.இந்தநிலையில் இந்த அறிவியல் வளர்ச்சியை தங்களின் பாரம்பரிய உணவுப் பண்டங்களைக் காக்கும் முயற்சிக்கான இடமாக மாற்றி வெற்றி கண்டுள்ளனர் நம்தமிழக இளைஞர்கள்.
அட உண்மைதானுங்க, நமது பாரம்பரிய உணவுப் பண்டங்களை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) எனும் இணையம் மூலம் அனைத்து மக்களின் கைகளுக்கும் கொண்டு சேர்க்கின்றனர். தித்திக்கும் சுவையும், மருத்துவ நலன்களும் நிறைந்த நமது பண்டைய தின்பண்டங்கள் அனைத்தும் இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கிடைக்கிறது.
பாரம்பரியம் மாறாத மண்பானைப் பால்கோவா, கருப்பட்டி மைசூர்பாக், நெல்லை அல்வா, சாத்தூர் சேவு, மணப்பாறை முறுக்கு, வெள்ளியணை அதிரசம் என அனைத்து சுவைகளும் நம் கை விரல் அசைவில்.
பட்டியலிடப்பட்ட தின்பட்டங்களை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஒரே நாளில் தமிழகம் மற்றும் பெங்களூரில் டெலிவரி. அமேரிக்கா, ஐரோப்பா என அனைத்து நாடுகளுக்கும் ஐந்து நாட்களில் அதிவிரைவு டெலிவரி செய்து அசத்துகின்றனர் நம் இளைஞர்கள்.
கடல் கடந்து,பல நாடு கடந்து நம் பண்டங்களின் மணமிக்க ருசியினை எதிர்பார்ப்பவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது நேட்டிவ்ஸ்பெஷல்.காம்.
இது பற்றி அவர்களிடம் கேட்ட பொழுது சுவை மிகுந்த,உடலுக்கு தீங்குவிளைவிக்காத நம்ம ஊர் தின்பண்டங்கள் கிட்டத் தட்ட நம் குழந்தைகளுக்கு அறிமுகமில்லாமல் போய் விட்டது.. பாப்கார்ன் தெரிந்த குழந்தைகளுக்கு நம்ம ஊர் பொரி கடலை தெரிவதில்லை அவர்கள் அவற்றை சுவைப்பதற்கான சந்தர்ப்பமும் இங்கு இல்லை.
ஆனால்,உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்ற பாப்கார்னை விட பொரி கடலை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சாக்லேட் ருசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கடலை மிட்டாய் ருசிக்க வாய்ப்பில்லை. இப்படி ஓர் நிலைக்கு முக்கிய காரணம் தரமான நம்ம ஊர்ப் பண்டங்கள் சந்தையில் கிடைப்பதில்லை என்பதுதான்.
இதனால் இந்த நிலையை நீக்கி அவர்கள் இவற்றை ருசிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதை முதன்மையாகக் கொண்டு துவங்கப் பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையம். இன்று எங்கள் வாடிக்கையாளர்களின் குழந்தைகள் பாப்கார்ன், சாக்லேட், இவற்றைப் புறந்தள்ளி தேங்காமிட்டாய், கடலை மிட்டாய், கருப்பட்டி மைசூர்பாக் என நம் பாரம்பரியப் பண்டங்களை கேட்டு வாங்கி உண்பது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. ”
தெளிவான நோக்கத்துடன் உலகம் முழுவதும் நம் பாரம்பரிய பண்டங்களை அவை புகழ்பெற்ற ஊர்களில் இருந்து நேரடியாக கொண்டு சேர்க்கும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.