Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

வீடியோவை வெளியிடுகிறேன்… சசி ஜெயலலிதாவை கொன்றதற்கான ஆதாரம் என் கையில் இருக்கிறது!


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த தீபா தன்னிடம்  சசி ஜெயலலிதாவை கொன்றதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியது அதிமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் பேசுகையில்,
“ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற நான் என்றும் அனுமதிக்க மாட்டேன். அத்தை வாழ்ந்த வீடு கோவிலை போல மதிக்கப்பட வேண்டியது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் உணர்ச்சிவசப்பட காரணம் என்மீது வேண்டும் என்றே பழியை சுமத்தியதால் தான்.
என் காரில் கஞ்சா இருப்பதாக கூறி வாக்கு வாதம் செய்தனர். அதனாலேயே எனக்கு கோவம் வந்து விட்டது.

தீபக் என் மீது கூறும் எந்த குற்றச்சாட்டும் உண்மையில்லை. உண்மைக்கும் புறம்பான விசயத்தை கூறி வருகிறார்.

என்னை திட்டமிட்டே கொலை செய்ய பார்க்கின்றனர். அவர்கள் கட்சிக்குள் நடக்கும் பூசலில் என்னையும் இழுக்க பார்க்கின்றனர்.

இது தொடர்பாக நான் பிரதமரை சந்தித்து நியாயம் கேக்க போகிறேன். விரைவில் அத்தையை சசிகலா கொன்றதற்கான ஆதாரத்தை வெளியிட போகிறேன்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.