June 16, 2017
இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் தடை விதிப்பு : விமான நிலையத்தில் அடாவடியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி !
விமானப் பணியாளர்களிடம் தகராறு செய்த புகாரில் தெலுங்கு தேசம் எம்.பி. திவாகருக்கு பல்வேறு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விமானம் நிலையத்தில் இன்டிகோ விமானத்தில் ஏறி ஐதராபாத் செல்ல அவர் சென்றுள்ளார். அப்போது விமானம் புறப்பட தயாராக இருந்ததால் அவருக்கு போர்டிங் பாஸ் வழங்க விமான நிலைய ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் இன்டிகோ விமான டிக்கெட் கவுண்டருக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த மேஜை மற்றும் பிரிண்டரை அவர் சேதப்படுத்தியுள்ளார். தெலுங்கு தேசம் எம்.பி.யின் நடவடிக்கையை அடுத்து இன்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டனர். ஏற்கனவே சிவசேனா எம்பி விமானத்தில் ஊழியர்கள் தகராறு செய்தார் என்ற காரணத்தால் தடை விதிக்கப்பட்டார், பின்னர் தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் தடை விதிப்பு : விமான நிலையத்தில் அடாவடியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி !
Reviewed by Admin
on
June 16, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.