Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2017

செல்போனுக்கு சிக்னல் கிடைக்கல... ஏணி போட்டு மரத்தின் மீது ஏறி பேசிய மத்திய அமைச்சர்! வாழ்க டிஜிட்டல் இந்தியா


மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் தனது சொந்த தொகுதியில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் ஏணியை போட்டு மரத்தின் மீது ஏறி நின்று பேசினார். செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில் தான் அமைச்சரின் சொந்த தொகுதி உள்ளதாக கேள்வி எழுந்துள்ளது.

மத்திய இணைய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் பிக்கானீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றார் அமைச்சர்.

அந்த நேரத்தில் அவரது செல்போன் திடீரென சினுங்கவே பேசத் தொடங்கியுள்ளார். ஆனால் முறையாக சிக்னல் கிடைக்காததால் செய்வறியாது திகைத்த அவர் மரத்தின் மீது ஏணிணை போட்டு ஏறி பேசியுள்ளார்.

அமைச்சர் மரத்தின் மீது ஏறி பேசியதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். சொந்த தொகுதியிலேயே சிக்னல் கிடைக்காததால் நொந்து போன அமைச்சர் என்ன இது என சலித்துக்கொண்டாராம்.

ராஜஸ்தான் மாவட்டத்தின் பல கிராமங்கள் செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காத நிலையில் செல்போனில் எப்படி ட்ரான்செக்ஷன் செய்வது டிஜிட்டல் இந்தியா எப்படி சாத்தியம் என்றம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.