Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2017

சென்னை சில்க்ஸ் கட்டிட தரை தளத்தில் மீண்டும் தீ- படிப்படியாக சரியும் கட்டிடம்


சென்னை தி.நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத்தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் படிப்படியாக சரிந்து இடிந்து விழுந்து வருவதால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் பரவி வருகிறது.
தி. நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7 மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் மூலம் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை கட்டிடத்தின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராட்டி கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

மீண்டும் பற்றி எரியும் தீ
இன்று காலையில் கட்டிடத்தின் முன்பகுதி தீப்பிடித்தது. முன்பகுதியும் துண்டு துண்டாக உடைந்து விழுந்தது. தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை முழுவதும் கரும்புகை பரவி வருவதால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
படிப்படியாக உடையும் கட்டிடம்

தீ விபத்தில் கட்டிடத்தின் 7 மாடிகளில் 2வது மாடி வரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டுமொத்த கட்டடமும் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அப்பகுதி முழுவதும் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 29 மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடம் எரிந்து வருகிறது.

கட்டிடம் முற்றிலும் இடிக்க முடிவு
கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் வெளியேறினர். இந்த நிலையில் கட்டிடத்தின் தரை தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். தீயை முற்றிலும் அணைத்த பிறகு அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.