June 14, 2017
பள்ளியில் இரட்டை ஜடை போடாததற்கு இந்த தண்டனையா..? அகமதாபாத்தில் நடந்த அநியாயம்!
பள்ளியில் இரட்டை ஜடை போடாததற்கு இந்த தண்டனையா..? அகமதாபாத்தில் நடந்த அநியாயம்!
அகமதாபாத்தில் இரட்டை ஜடை போடாத காரணத்துக்குக்காக, 5-வது படிக்கும் மாணவிகளைத் தோப்புக்கரணம் போட வைத்ததில், ஒரு மாணவி கால்வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்திய தண்டனை சட்டத்தின் 83-வது பிரிவின்படி, 5 வயதுக்கு மேல் - 12 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் செய்யும் தவறுகள் குற்றமாகாது. சிறுவர்கள் அறியாமல் செய்யும் குற்றத்துக்கு அவர்களுக்குக் கடுமையானத் தண்டனை வழங்கப்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் பள்ளிகளில் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே அகமதாபாத்தில் 5-வது படிக்கும் மாணவிகளைக் கடுமையாகத் தண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கிறது லலிதா கிரீன் லான்ஸ் பள்ளி. இந்தப் பள்ளியில் இன்று சில மாணவிகள் இரட்டை ஜடை போடாமல் வந்துள்ளனர். அதைக் கண்டிக்கும் விதமாக, மாணவிகளைச் சுமார் 40 நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவிக்குக் கடுமையான கால்வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம்மீது மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மேலும் மாவட்டக் கல்வித்துறை அதிகாரி, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
Class 5 student in Ahmedabad hospitalized as school authorities allegedly forced students to do sit-ups reportedly for not sporting 2 braids pic.twitter.com/3ysC3FtmdZ
- ANI (@ANI_news) June 13, 2017
Dailyhunt
பள்ளியில் இரட்டை ஜடை போடாததற்கு இந்த தண்டனையா..? அகமதாபாத்தில் நடந்த அநியாயம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.