Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2017

ஒரே ஒரு கழிவறை இல்லை: காரணம் மூடநம்பிக்கை : கிராமத்தில் ஏசி, கெய்ஸர், கார் கூட இருக்கு !


பிகார் மாநிலத்தின் தென்மாவட்டமான நவடாவின் பல கிராமங்கள், செல்வ வளத்தோடு செழிப்பாகவே உள்ளன.

சுமார் 200 குடும்பங்கள் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் வீடுகளில் வண்ணத் தொலைக்காட்சி, படுக்கை அறைகளில் குளிர்சாதன வசதி, கெய்ஸர்கள் இருக்கின்றன. அவ்வளவு ஏன் சில வீடுகளில் கார் கூட வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு வீட்டில் கூட தப்பித் தவறி ஒரு கழிவறை இல்லை.

ஒரு பக்கம் இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா என்ற கோஷத்தை மத்திய அரசு அழுத்தம் திருத்தமாகக் கூறி வந்தாலும், தினமும் காலையில் இந்த கிராம மக்கள் வழக்கம் போல தங்களது காலைக் கடமைகளை முடிக்க வெட்டவெளிக்குத்தான் செல்கிறார்கள்.

வெட்டவெளி கழிப்பிடங்களை ஒழிக்க மத்திய அரசு எடுத்து வரும் பகீரத முயற்சிகள் இந்த கிராமத்தினருக்குத் தெரியாமல் இல்லை, அதே சமயம் வீட்டில் ஒரு கழிவறை கட்ட அவர்களுக்கு காசில்லாமலும் இல்லை. பிறகு ஏன் கழிவறை கட்டவில்லை என்றால், அது அவர்கள் கிராமத்தின் 29 ஆண்டு கால மூட நம்பிக்கை என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், காஸிபுர் கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவறை கட்டினால், உடனடியாக அந்த வீட்டில் யாராவது உயிரிழந்துவிடுவார்கள் என்ற மூட நம்பிக்கை நிலவுகிறது.

இந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே இந்த பயம் இருக்கிறது. 1988ம் ஆண்டு சித்தேஷ்வர் சிங் என்பவர் தனது வீட்டில் கழிவறைக் கட்டத் தொடங்கினார். கழிவறை கட்டி முடிப்பதற்குள் அவரது இளைய மகன் இறந்துவிட்டான் என்று கூறுகிறார் கிராமவாசி ஒருவர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் அவ்வப்போது கழிவறைக் கட்ட வேண்டும் என்று அடம் பிடிக்கும்போதெல்லாம் அவர்களை சமாதானப்படுத்த அந்த ஊர் பெரியவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

அதாவது, கழிவறை வசதி இல்லாததால் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெண்களை, எங்கள் ஊர் இளைஞர்களுக்குக் கட்டிக் கொடுக்க விரும்புவதில்லை. அதுதான் எங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது என்கிறார் வயதில் மூத்த கிராமவாசி.

அப்படியே வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் எங்கள் ஊருக்கு திருமணமாகி வந்தாலும், சில நாட்களிலேயே கழிவறை கட்டிக் கொடுக்குமாறு பிரச்னை செய்கிறார்கள். ஆனால், எங்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை சமாதானம் செய்கிறோம்.

அவ்வளவு ஏன், எங்கள் ஊரில் இருக்கும் துவக்கப் பள்ளியில் அரசு சார்பில் கட்டப்பட்ட கழிவறை 8 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.