June 29, 2017
தாய் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க இந்த சிறுமி என்ன செய்தார் தெரியுமா? அசிங்கப்பட்ட போலீஸ் ! இது உ.பி.யில் !!
தாய் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தனது உண்டியல் பணத்தை போலீசாரிடம் லஞ்சமாக கொடுத்து திடுக்கிட வைத்துள்ளார் 5 வயது சிறுமி.
உத்தரபிரதேச மாநிலத்தின், மீரட்டில் வசிக்கும் 5 வயதான சிறுமமி, மான்வி, செவ்வாயன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராம் குமார் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மான்வியின் தாயார், சீமா கௌஷிக், அவரது கணவர் சஞ்சீவ் குமார் மற்றும் கணவன் குடும்பத்தாரால் வரதட்சணை தொந்தரவு செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது தாயின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமி கூறினார்.
மேலும் தனது கையிலிருந்த உண்டியலை போலீசாரிடம் கொடுத்து, இதை லஞ்சமாக வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் என கூறினார். போலீசார் இதுவரை இந்த வழக்கில் சுணக்கம் காட்டி வந்த நிலையில், சிறுமி இவ்வாறு உண்டியல் பணத்தை கொடுத்து அசிங்கப்படுத்தியுள்ளார்.
சஞ்சீவ் குமார், அவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமாவின் தந்தை சாந்தி ஸ்வரூப் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், சஞ்சீவ் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்களை கைது செய்ய, போலீசார் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சிறுமி இவ்வாறு உண்டியலை கொடுத்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த, போலீஸ் ஐ.ஜி. கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி, சிறுமியை அனுப்பி வைத்தார். மேலும், லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தாய் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க இந்த சிறுமி என்ன செய்தார் தெரியுமா? அசிங்கப்பட்ட போலீஸ் ! இது உ.பி.யில் !!
Reviewed by Admin
on
June 29, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.