Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

கொடுத்தால் குறையாத ஒரே தானம்... ரத்த தானம்!


ஜூன் 14 ஆம் தேதி இன்று... 'உலக ரத்த தான விழிப்பு உணர்வு நாள்'.
"மனிதர்கள் அனைவராலும் எளிதாகச் செய்யக்கூடிய தானம், ரத்த தானம். ஒருவர் ரத்த தானம் செய்தால், புதிய ரத்த அணுக்களால் மீண்டும் உடலில் ரத்தம் உற்பத்தியாகிவிடும். குறிப்பாக, இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி யூனிட் ரத்தம், பல்வேறு பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், சராசரியாக 80 - 90 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே உரிய நேரத்தில் கிடைக்கிறது. இதனால், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. எனவே, நாம் கொடுத்து உதவும் ரத்தம் பல உயிர்களை காக்கும் என்பதால், அனைவரும் நம் வாழ்நாளில் முடிந்த அளவுக்கு ரத்த தானம்செய்து உதவலாம்" என்று வேண்டுகோள் விடுக்கிறார், தொடர்ந்து 45 ஆண்டுகளாக ரத்ததானம்செய்து உதவிவரும் சென்னையைச் சேர்ந்த ராஜ்சேகரன். மேலும், இவர் ரத்த தானம் செய்ய சில ஆலோசனைகளையும் கூறுகிறார்.


 18 வயது முதல் 65 வயதுடைய, குறைந்தபட்சம் 45 கிலோ எடையுள்ளவர்கள் அனைவருமே 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
  உடல் நலப் பிரச்னைகள், மாதவிடாய் காலத்திலுள்ள பெண்கள், மதுபோதையில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் தாய்மார்கள் ரத்த தானம் செய்ய முடியாது.
  மருத்துவரிடம் உடல் பரிசோதனையும் ஆலோசனையும் பெற்ற பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.