Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2017

ஜனாதிபதி தேர்தல் எம்.எல்.ஏ.க்களை வளைத்து கண்ணாமூச்சு காட்டும் தினகரன் ! கோபத்தில் மத்தியரசு !!


ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை மிரட்டிப் பார்க்கவே எம்.எல்.ஏக்களை தினகரன் வளைத்துப் போட்டு வருவதாக சசிகலா கோஷ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. கனிமொழி மூலமாகவும் தி.மு.கவுக்கு மறைமுக தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. உத்தரபிரதேச தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பா.ஜ.கவின் வெற்றி சதவீதம் அதிகரித்துவிட்டது.

பாஜகவின் டார்கெட்டே 60% வாக்குகளைப் பெற வேண்டும் என்பதுதான். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் ஒன்றாக்கி, முழு வாக்குகளையும் பெற வேண்டும் என்பதும் பா.ஜ.கவின் திட்டம்.

ஓபிஎஸ்ஸிடம் டெல்லி நேரடியாக இதை சொல்லிவிட்டது. இதனால் மீண்டும் இணைப்பு... இணைப்பு எனும் பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.

அதேநேரத்தில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை தினகரன் அதிரடியாக வளைத்து தம் வசம் வைத்திருப்பது பாஜகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்து தினகரன் தங்களுக்கு சவால் விடுகிறாரே என்கிற கடும் கோபத்தில் இருக்கிறதாம் டெல்லி.

கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.கவில் இருந்து ஆறு எம்.எல்.ஏக்கள். பைரோன்சிங்குக்கு வாக்களிக்காமல், காங்கிரஸ் கட்சியின் பிரதீபா பாட்டிலுக்கு வாக்களித்தனர். அதேபோல், மோடி நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தால் என்ன செய்வது?' என்பதால்தான் டெல்லி அமைதியாக வேடிக்கை பார்க்கிறதாம்.

தற்போது 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை வளைக்க இருக்கிறார் தினகரன். ஜனாதிபதி தலைவர் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் தினகரன் ஆடுபுலி ஆட்டம் ஆடுவதை டெல்லி ரசிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் மட்டும் இந்த ஆட்டத்தால் பாதிப்பு வந்தால் அவ்ளோதான் என கருவிக் கொண்டிருக்கிறதாம் டெல்லி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.