Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2017

மணமேடை ஏறிய போது மணமகன் செய்த வேலை: திருமணத்தை நிறுத்திய பெண்


மணமேடையை அடைந்த போது மணமகன் குட்கா மென்று கொண்டிருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Ballia மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும், Lalganj கிராமத்தைச் சேர்ந்த ஆணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்காக மணமேடை வரும் வரை மிக உற்சாகமாக மணமக்கள் இருந்தனர்.

ஆனால் மணமேடையில் திருமண சடங்கு நடந்து கொண்டிருந்த போது, மணமகன் குட்கா(புகையிலை) சுவைத்துக் கொண்டிருந்ததால், பிடிக்காத மணமகள் திடீரென்று திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

பெண்ணின் முடிவு இரு வீட்டாருக்கும் பிடிக்கவில்லை என்பதால், அன்று முழுவதும் பெண்ணிடமும், மணமகன் வீட்டாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், மணமகளுக்கு இத்திருமணம் பிடிக்கவில்லை. ஏனெனில் அப்பெண் புகையிலைக்கு அடிமையானவரை தன்னால் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

இருவீட்டாரும் அப்பெண்ணை சமரசம் செய்து பார்த்தும் அப்பெண் இறுதி வரை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்காததால் திருமணம் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.