June 18, 2017
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு... சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம்!
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் சாமளாபுரத்தில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தொகுதி எம்.எல்.ஏ கனகராஜை, மக்கள் வளைத்துப் பிடித்துக் கதறித் துடித்தார்கள்.
இதையடுத்து, எம்.எல்.ஏ-வை பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு, மக்கள் மீது வன்முறை வெறியாட்டம் ஆடியது காவல்துறை. குறிப்பாக, ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் கன்னத்திலேயே அறைந்த வீடியோ பதிவு... ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் பரவி நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்த சம்பவத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாண்டியராஜனுக்கு அண்மையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதேபோல், பேரூராட்சிப் பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது அம்மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. இதனால், மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை ரத்து செய்ய கோரியும், டாஸ்மாக் கடை திறக்கமாட்டோம் என உறுதி கூறிய டாஸ்மாக் அதிகாரிகள்,அதை கடைபிடிக்காமல் மீண்டும் பேரூராட்சிப் பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்ததை கண்டித்து மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வெயில் கொளுத்தி வரும் நிலையில், அங்கு பந்தல் போடவந்தவர்களை போலீசார் விரட்டியுள்ளனர். இதனால், கொளுத்தும் வெயிலில் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு... சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.