June 2, 2017
ரஷ்ய அதிபர் புதின் திடீர் புகழாரம்! எதையும் வெளிப்படையாகக் கூறும் நபர் டிரம்ப் !!
ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் டிரம்ப் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழ்ந்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அவரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் குறித்து விளாடிமிர் புதின் நேற்று பேசியதாவது: எனக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக எதையும் வெளிப்படையாகக் கூறும் நபரையே எனக்குப் பிடிக்கும்.
அப்படிப்பட்ட நபராக அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கிறார். எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதையும் கடந்து, அவருடன் தனிப்பட்ட முறையிலும் அரசியல்ரீதியாகவும் நல்ல தொடர்பை வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறேன். இதற்காக அவரை விரைவில் சந்திப்பேன். மேலும் டிரம்ப் போன்றதொரு சிறந்த நிர்வாகிக்கு யாரும் எந்தவொரு அறிவுரையும் வழங்கத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதற்கு ரஷ்யா உதவியதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் வேளையில் டிரம்ப்பை புதின் புகழ்ந்து இருப்பது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் திடீர் புகழாரம்! எதையும் வெளிப்படையாகக் கூறும் நபர் டிரம்ப் !!
Reviewed by Admin
on
June 02, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.