June 12, 2017
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால தடையை நீக்கியுள்ளது. மேலும், மாநில உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு அண்மையில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தமிழ் மொழி வினாத்தாளிலும், ஆங்கில மொழி வினாத்தாளிலும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தமிழக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதேபோல், பெங்காலியிலும் மாறுதலகள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.