June 12, 2017
கர்நாடகாவில் முழு அடைப்பு : போலீஸார் குவிப்பு!
கர்நாடக மாநிலத்தில், கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்யக் கோரியும் மேகதாது பிரச்னைக்கு தீர்வு காணவும் கோலார், சிக்காபல்லாபூர், தாவண்கரே மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தி, இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.
இன்று அதிகாலை, தமிழகப் பேருந்துகள் கர்நாடக-தமிழக எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால், சிறிது நேரத்தில் தமிழகப் பேருந்துகள் கர்நாடக மாநிலத்துக்கு வழக்கம்போல இயக்கப்பட்டன. அங்கு பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சுமார் 15,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் முழு அடைப்பு : போலீஸார் குவிப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.