Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2017

ஆங்கிலம் தெரியவில்லை என நகைப்புக்கு உள்ளானவர் சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்றாவது இடம் பிடித்தார்


ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் நகைப்புக்கு உள்ளாகிய விவசாயின் மகன் கோபாலகிருஷ்ணா சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்றாவது இடம் பிடித்து பெருமை சேர்த்து உள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயின் மகன் கோபாலகிருஷ்ணா ரோனங்கி மூன்றாவது இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

ஆந்திராவில் மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து படித்து முன்னேறிய கோபாலகிருஷ்ணா ஸ்ரீகாகுளம் மாவட்ட பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

கோபாலகிருஷ்ணா ரோனங்கி பேசுகையில், “என்னுடைய பெற்றோர் வாழ்க்கைக்காக போராடியதை நான் பார்த்தவன். நான் எப்போதும் சமூதாயத்திற்கு பணியாற்ற விருப்பம் கொண்டு இருந்தேன், என்னுடைய குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் விரும்பினேன். எனவே, நான் சிவில் சர்வீஸ் பணியில் சேர முடிவு செய்தேன். நான் மிகவும் கடினமாக முயற்சி செய்தேன். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று உள்ளேன்,” என கூறிஉள்ளார்.

இன்று சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்றாவது இடம் பிடித்து உள்ள கோபாலகிருஷ்ணா ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் சரியாக பேச முடியாத காரணத்தினால் பிறரால் நகைப்புக்கு உள்ளானவர். என்னுடைய மாநிலம் அல்லது நாட்டின் பிற பகுதியில் வாழும் ஏழை மக்களுக்காக பணியாற்றவே என்னுடைய விருப்பம் ஆகும். ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பது என்னுடைய கனவாகும். அது மிகவும் மதிப்பு மிக்க பதவியாகும். குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் கல்விதுறை வளர்ச்சியடையும் வகையில் பணியாற்ற விருப்பம் கொண்டு உள்ளேன் என கூறிஉள்ளார்.

கோபாலகிருஷ்ணாவின் சகோதரர் ஒத்டு (ஸ்டேட் வங்கி அதிகாரி)  பேசுகையில், நல்ல கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் குறைபாடு இருந்தாலும் எப்படி படித்தோம் என்பதை எடுத்து கூறினார். என்னுடைய சகோதரர் கோபால கிருஷ்ணா நன்றாக படிப்பார். ஒருமுறை அவர் பயிற்சி மையத்திற்கு சென்றார். அப்போது அவரை எல்லோரும் கேலி செய்து உள்ளனர். என்னிடம் தெரிவித்தார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரியவில்லை என்ற காரணத்தினால் தேர்வுஎழுத தகுதியற்றவர் என பிறர் நகைத்ததாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார். ஆனால் தேர்வை எழுதிமுடிக்கவேண்டும் என உறுதியாக முடிவுசெய்தார் என்றார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாராசம்பா கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணா தெலுங்கு மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.