Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2017

நொடியில் மரணம்... சமயோசிதமாக உயிர்பிழைத்த இளம்பெண்!


அந்தப்பெண் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்தான்.  ஐந்து நொடிகளில் நிகழ இருந்த ரயில் விபத்தில் இருந்து தனது சமயோசித முடிவால் மரணத்தை வென்றிருக்கிறார் அந்த 19 வயது பெண்.

மும்பையில் உள்ள குர்லா ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி நடைபெற்ற அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பதபதப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரதிக்‌ஷா நடேகர். தனது நண்பரை பார்க்க கடந்த மாதம் 13 ம் தேதி குர்லா ரயில் நிலையத்திற்கு சென்றார்.  பகல் 11 மணியான அப்போது காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு செல்போனில் பேசியபடி 7வது ப்ளாட் பாரத்தை டிராக் வழியே கடக்க முயன்றார். அவர் எதிர்பார்த்திராத நிலையில் அருகில் வந்துவிட்டது சரக்கு ரயில். கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலை. ப்ளாட் பாரத்தில் நடுவில் நின்ற அவருக்கு தப்பிக்கவே வழியில்லாத நிலை. சில அடி தூரத்தில் மிக நெருக்கத்தில் வந்து விட்டது ரயில். தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியலைந்தார். முயற்சிகள் பலனளிக்கவில்லை. கண்முன் மரணம் நிகழபோகிறது என்பதை உணர்ந்த ப்ளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் கதறி ஓலமிட்டனர். அதற்குள் மூன்றடி பக்கத்தில் வந்து விட்டது ரயில். மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்த அந்தப்பெண் காதைப் பொத்திக்கொண்டு அலறித்துடித்தார். யோசிக்கக் கூட நேரமில்லாத ப்ரதிக்‌ஷா  திடீரென சமயோசிதமாக  செயல்பட்டார்.
ரயில்வே தண்டவாளங்களில் நடுவில் நின்றிருந்த அவர் ரயில் நெருங்கும் ஒரு நொடியில் கீழே படுத்து விட்டார். உயிரை இழக்க இருந்த அவர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் படுத்ததால் உயிரை காப்பாற்றிக்கொண்டார் ப்ரதிக்‌ஷா. சில சிராய்ப்புகளுடன் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக வலம் வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.