Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் : தடுப்பணை விவகாரம் !


இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தின் வேளாண் துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் விவகாரம் குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும்முன் ஆந்திர அரசு தமிழகத்தை கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். தடுப்பணை கட்டும் ஆந்திர மாநிலத்தின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கொசஸ்தலை ஆற்றின் கிளை நதியான கொசாவை தமிழகத்தில் 354.32 ஏக்கர் நிலம் சாகுபடிக்காக நம்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்தி, தமிழகத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொண்ட பிறகுதான் இதன் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

கொசஸ்தலை ஆற்றில் 4 இடங்களில் ஆந்திர அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தடுப்பணைகளைக் கட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.