June 14, 2017
அணு உலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! -சுப.உதயகுமாரன் போராட்ட அறிவிப்பு
அணு உலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! -சுப.உதயகுமாரன் போராட்ட அறிவிப்பு
கூடங்குளத்தில் அணு உலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவை முன்பாக போராட்டம் நடத்தப்படும் என சுப.உதயகுமாரன் அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகளுக்கு சுற்றுப்புறக் கிராம மக்களிடம் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய போதிலும், அவற்றைக் கண்டுகொள்ளாமல் அணு உலைகள் இயக்கப்பட்டன. பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும், விபத்து இழப்பீடு தொடர்பான ஆவணங்கள் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக் குழுவினர் வலியுறுத்திய போதிலும், அதற்கும் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. இதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின. அதனை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து காணொலி மூலமாகத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அணு உலைக்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டு அதில் கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே இரு அணு உலைகள் செயல்பட்டு வரக்கூடிய இந்த இடத்தில் கூடுதலாக இரு உலைகள் அமைப்பது சுற்றுப்புறக் கிரமாங்களைச் சேர்ந்த மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமருடன் அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார். அதன்படி, கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் தொடங்கப்படும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தம் செய்துள்ளனர். மக்களின் எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ச்சியாக அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ள விவகாரம் அணு உலை எதிர்ப்பாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
இது குறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தின் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் பற்றி விவாதித்து, அந்தத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், சட்டமன்றத்தின் முன்பாக 'நீதி கேட்டு நிற்கும் போராட்டம்' நடத்துவோம்.
பேரவைக் கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் எங்களுடைய கோரிக்கையை பேரவையில் நிறைவேற்ற தமிழக அரசுக்கு ஓரிரு வாரங்கள் அவகாசம் அளிப்போம். அதற்குள் நிறைவேற்றத் தவறினால், எங்களுடைய போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு உலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! -சுப.உதயகுமாரன் போராட்ட அறிவிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.