Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

பேரவைக்குள் அ.தி.மு.க. ஒற்றுமை செங்கோட்டையனுக்கு பாண்டியராஜன் கைகுலுக்கி பாராட்டு !


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பேரவையில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதங்களை முடித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வாசித்து முடித்தார். இதைத் தொடர்ந்து, பேரவை வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 16) ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது ஒவ்வொருவரும் கலைந்து செல்லும் போது, பேரவையின் மையப் பகுதியில் இருந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு அருகில் சென்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் கை கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

பேரவை நிகழ்வுகள்: பேரவை நடவடிக்கைகளின் போதே, பாண்டியராஜனும் தங்க தமிழ்ச்செல்வனும் சிரித்துப் பேசியபடி இருந்தனர். அந்தக் காட்சியை பார்க்கும்படி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக் காட்டினார்.

பின்னால் திரும்பிப் பார்த்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதுபற்றி ஒன்றுமில்லை என்பதுபோல் துரைமுருகனிடம் சைகை காட்டினார். பின்னர் பாண்டியராஜனின் தோளில் கைபோட்ட தங்க தமிழ்ச்செல்வன், தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருப்பதாக துரைமுருகனிடம் சைகையில் தெரிவித்தார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.