Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2017

பிம்பிளிக்கி பிளாப்பி.... டமால்....டுமீல் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலரும் முதல்வரும் நானே- நிதி .ஜெயக்குமார்!


அதிமுகவின் அடுத்த பொதுச்செயலரும் முதல்வரும் தாமே என அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி காட்டி வருவதை சக அமைச்சர்கள் மிரட்சியாக பார்க்கின்றனர்.

தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் திடீரென ஜெயலலிதாவால் தூக்கியடிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். இதற்கு காரணமே, தம்மை ஒரு முதல்வராக நினைத்து தடபுடலாக பிறந்தநாள் கொண்டாடினார் ஜெயக்குமார் என்பதுதான்.
சட்டசபை தேர்தலில் எப்படியோ மீண்டும் சீட் கிடைத்து அமைச்சராகவும் ஆகிவிட்டார் ஜெயக்குமார். ஜெயலலிதா இருந்தவரை அமைதியாக மீன்வளத்துறையை மட்டும் பார்த்து கொண்டிருந்தவர் எடப்பாடி ஆட்சியில் நெம்பர் 2 இடத்துக்கு நிதி அமைச்சராக முன்னேறினார்.

ருத்ர தாண்டவம்...
அவ்வளவுதான் ஜெயக்குமாரின் ருத்ர தாண்டவம் உச்சத்தை எட்டியது.... அதுவும் தினகரனும் சிறைக்கு போனபின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட, சூப்பர் முதல்வர் என விமர்சிக்கும் அளவுக்கு செம ஆட்டம் போட தொடங்கினார் ஜெயக்குமார்.

 எடப்பாடி படத்துக்கு தடை
எடப்பாடிக்கு அடுத்து தமக்குதான் முதல்வர் பதவி; சசிகலா இல்லாத நிலையில் தாமே அதிமுக பொதுச்செயலர் என்கிற கோதாவில் வலம் வருகிறாராம் ஜெயக்குமார். இதனால் தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான போஸ்டர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா அதற்கடுத்து தமது படம் மட்டுமே இடம் பெறவேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளாராம்.

ஜெயக்குமாருக்கு ஆப்பு ரெடி?
ஏற்கனவே தினகரன் தரப்பின் முழு கோபமும் ஜெயக்குமார் மீதுதான் இருக்கிறது. ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரை கழற்றிவிட தினகரன் கோஷ்டி தருணம் பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால் எடப்பாடி தரப்போ கொங்கு கோஷ்டியை சேர்ந்த தங்கமணி, வேலுமணியை தக்க வைக்க ஜெயக்குமாரை தூக்கியடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

 சூப்பர் டூப்பர் முதல்வர்
இதையெல்லாம் உணர்ந்தும் கூட ஏதோ ஒரு நம்பிக்கையில் சூப்பர் டூப்பர் முதல்வராக, சுயேட்சை முதல்வராக வலம் வருகிறார் ஜெயக்குமார். விடாது கருப்பாய் ஜெயக்குமாரை துரத்தும் இந்த முதல்வர் ஆசை நிறைவேறுமா? மண்ணோடு மண்ணாகிப் போகுமா? என்பதுதான் அதிமுகவினரின் ஹாட் டாபிக்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.