Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2017

இன்னும் ஒரு வாரம் ஆட்சி நீடிப்பதே கடினம்! மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!


தமிழக சட்டசபை ஜூன் 14ம் தேதி வரை நீடிப்பதே சந்தேகமாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் குளத்தை தூர்வாரி வருகிறார்கள். இந்த குளத்தை ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளம்பத்திற்காக மேட்டூர் அணையை தூர்வாரினார். அதன் பின்னர் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக அணையை தூர்வாரும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும், வருகின்ற ஜூன் 14ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளது. அது வரைக்கும் அதிமுக ஆட்சி நீடிப்பது சந்தேகமாக உள்ளது. சட்டசபை கூடுவதற்கு முன்பாகவே ஆட்சி இருக்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம். அப்படி ஒரு வேளை சட்டமன்றம் கூடினால் திமுக எப்போதும் மக்களுக்காக ஜனநாயக கடமையை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.