Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2017

மோடியால் இந்தியாவுக்கு 56 லட்சம் கோடி நஷ்டம்.. சுதந்திரத்திற்கு பிறகு மிகப்பெரிய பின்னடைவு! நாட்டை


இந்தியா மிக வேகமாக வளரும் நாடு என்ற மதிப்பை இழந்து வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவுல் கருப்பு பணம் ஒழியும் என்று மோடி தரப்பில் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டது. indias-gdp-growth-rate/ ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கோ இது ஒரு வரலாற்று பிழை என்று விமர்சனம் செய்தார்.
மேலும் ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இரண்டு சதவீதம் வரை வீழ்வதற்கு வாய்ப்பு உள்ளதாக என்றார். மேலும் பல்வேறு பொருளாதார வல்லுனர்களும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மோசமான நடவடிக்கையையே ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.
ஆனால் 2015 -16ல் 7.6 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 7.1 சதவீதமாக குறையும் என கருதப்பட்டது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜிடிபி 6.1 சதவீதமாக குறைந்துள்ளது.
indias-gdp-growth-rate/
மேலும் இந்தியாவுக்கு மோடியின் நடவடிக்கையால் சுமார் 56 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கையாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
கடந்த 2010 -11ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 10.3 சதவீதமாக இருந்தது. அப்போது பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.