June 15, 2017
மோடி அரசின் 3 ஆண்டுகால "ஒளிவெள்ளம்" இதுதானா?
பிரதமர் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அரசின் சாதனைகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
'மோடி ஃபெஸ்ட்' என்ற பெயரில் நடைபெறும் கண்காட்சியில், மூன்றாண்டுகளில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், முடித்துள்ள வளர்ச்சிப் பணிகள், விவசாயிகளுக்கான பல்வேறு சலுகை அறிவிப்புகள் என எண்ணற்ற அம்சங்கள் இடம்பெற்று, மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
அரசின் சாதனைகளை பல்வேறு மத்திய அமைச்சகங்களும் புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டு வருகின்றன. இதில், நாம் கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய உள்துறை அமைச்சகம் தனது சாதனையாக இந்திய எல்லைப்பகுதியில், 647 கிலோ மீட்டர் தொலைவுக்கு, தீவிரவாத ஊடுருவலைத் தடுக்கும் வகையில், ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இருப்பதுதான். ஒளிவிளக்குகள் ஜொலிக்கும் எல்லைப்பகுதியின் வண்ணப்புகைப்படத்தையும் உள்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டின் எல்லை என்று மட்டும் கேட்டுவிடக்கூடாது.
அதில்தான் சிக்கல் தொடங்குகிறது. ஒளிரும் வண்ண விளக்குகளுடன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புகைப்படம் ஸ்பெயின் - மொராக்கோ எல்லைப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. சாம் ஜாவித் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இத்தகவலை ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய எல்லையில் மோடி அரசு மேற்கொண்ட பணிகளைப் பார்த்தால், நீங்கள் பெருமை அடைவீர்கள்; மிகவும் பாராட்டுவீர்கள்" எனும் கவர்ச்சிகரமான தலைப்புடன் உள்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
"இந்திய எல்லையில், மோடி அரசு 647 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒளிவிளக்குகளை அமைத்துக் கொடுத்து, பணிகளை நிறைவேற்றியிருப்பது இந்திய மக்களைப் பெருமையடையச் செய்கிறது" என்று குறிப்பிட்டு, அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
"பார்ப்பதற்கு என்னவோ அந்தப் புகைப்படங்கள் மிகவும் அழகாகவும், இந்திய எல்லைப்பகுதியைப் போன்றே காட்சியளித்தாலும், நிலப்பகுதியை உற்றுநோக்கும்போது, அது இந்திய எல்லைபோன்று தெரியவில்லை. மிகவும் குறைந்த தொலைவில் கடலைப் பார்க்கும்படியாக அந்த புகைப்படம் உள்ளது. எனவே, அது போலி புகைப்படம் என்று நான் உணர்ந்தேன். இதையடுத்து, அதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்தபோது, அது போலி என்பது உறுதிப்படுத்தப்பட்டது" என்கிறார் கட்டுரையாளர்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "2014 ஆம் ஆண்டிலேயே இந்திய எல்லையில் ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் நினைவுக்கு வரவே, அதுபற்றி, மேலும் தகவல்களை திரட்டத் தொடங்கினேன். ஆழமாக யோசித்து எல்லைப்பகுதி குறித்து உள்துறை அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை முழுவதுமாகப் படித்தேன். இந்த சாதனை ஒரு ஆண்டிலா அல்லது மூன்று ஆண்டிலா என்று ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த மூன்று ஆண்டில், எல்லையில் விளக்குகள் அமைக்கப்பட்டதாகத் கூறப்பட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, என்.டி.டிவி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்திகளும் வெளியாகின. உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்ட அந்த செய்திகளில், ஒரு ஆண்டில் எல்லைப்பகுதிகளில் விளக்குகள் அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை இல்லாதவகையில், நாட்டிலேயே இதுபோன்ற ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டிருப்பது முதல்முறை என்று அந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால், எல்லையில் முந்தைய நிலை என்ன என்பதுபற்றி தெரிவிக்கப்படவில்லை. எனவே, அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவுசெய்தேன். உள்துறை அமைச்சகம் வெளியிட்டது போன்ற புகைப்படங்களை நான் எங்கேயோ பார்த்ததுபோன்று தோன்றியது.
உள்துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் 45-வது பக்கத்தில், "எல்லையோரத்தில் ஒளிவிளக்குகள்" என்ற தலைப்பில் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. "நமது எல்லைப்பகுதியை ஒட்டி ஒளிவிளக்குகள்" என்று குறிப்பிட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். அந்த புகைப்படமும், அருகாமையில் உள்ள நீர் நிலையும் எனக்கு ஏதோ ஒரு உணர்வை தூண்டின. அப்போதுதான், அந்தப் புகைப்படம் ஸ்பெயின் - மொராக்கோ எல்லையில் இருநாடுகளையும் பிரிக்கும் கடல் பகுதியை ஒட்டி, அமைக்கப்பட்டிருந்த ஒளிவிளக்குகள் என்று எனக்குத் தெரியவந்தது. ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையோரம், ஸ்பெயினை ஒட்டிய பகுதிகளில் அமைக்கப்பட்ட ஒளிவிளக்குகள் அவை என்பதும், இந்தப் புகைப்படம் ஸ்பெயின் புகைப்பட கலைஞர் 'ஜாவியர் மோயனோ'-வால், கடந்த 2006 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதையும் கண்டறிந்தேன்.
ஏதாவதொரு இணையதளத்திலோ அல்லது வாட்ஸ் அப் தகவலாகவோ அந்தப் புகைப்படம் இடம்பெறவில்லை. உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் போலியான புகைப்படம் இடம்பெற்றிருப்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. இதுபோன்ற போலியான தகவலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொரு இணையதளத்திலும் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டு வெளியான தகவலில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உள்துறை அமைச்சக தகவலின்படி, எல்லையில் விளக்குகள் அமைக்கும்பணி 2003 ஆம் ஆண்டு தொடங்கியதாகவும், 2013-2014-ஆம் ஆண்டு அறிக்கையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஒரு குறிப்பிட்ட பகுதி தவிர அனைத்துப் பகுதிகளிலும் விளக்குகள் அமைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் 62 சதவீதம் எல்லையோரம் விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததாகவும், மொத்தம் 647 கிலோ மீட்டரில் மோடி அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 45 கிலோ மீட்டரும், எஞ்சிய பகுதி பங்களாதேஷ் எல்லையை ஒட்டியும் விளக்குகள் அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 2011 ஆம் ஆண்டிலேயே
மோடி அரசின் 3 ஆண்டுகால "ஒளிவெள்ளம்" இதுதானா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.