June 7, 2017
சூதாட்டத்தின் அடிமையால் 36 பேரை கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை!
சூதாட்டத்தின் அடிமையால் 36 பேரை கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சூதாட்ட மையத்தில் 36 பேரை கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவில் உள்ள Resorts World Casino என்ற சூதாட்ட மையம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி ஹொட்டலுக்கு தீ வைத்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர் தாக்குதல் நடத்திய நபரும் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Jessie Javier Carlos எனத் தெரிய வந்தது.
மேலும், இவர் பிலிப்பைன்ஸ் குடிமகன் எனவும் தீவிரவாதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
சூதாட்டத்திற்கு அடிமை ஆனதால் கணக்கில்லா பணத்தை இழந்து கடனாளி ஆகியுள்ளார். கடன் தொல்லை தாங்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார்.
இதுபோன்ற ஒரு மனநிலையில் தான் அவர் சூதாட்ட மையத்தில் தாக்குதல் நடத்தியதாக விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சூதாட்டத்தின் அடிமையால் 36 பேரை கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 07, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.