June 8, 2017
காஞ்சிபுரம் அருகே விபத்து... 15 பேர் படுகாயம்!
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே தொடர்ந்து விபத்துகள் நடந்துவருகின்றன. பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், ஒரகடம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், சுமார் பதினைந்து பேர் லேசான காயமுற்றனர். காயமுற்றவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 4.45-க்கு நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணி நேரம் நின்றன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
காஞ்சிபுரம் அருகே விபத்து... 15 பேர் படுகாயம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.