Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2017

ஜூலை 1 முதல் அமலாகும் GST-யால் சேவை துறைக்கு காத்திருக்கிறது சவால் !


நாட்டின் மிகப் பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் GST வரி, சேவைத் துறைக்கு கடும் சவால்களை தர காத்திருக்கிறது. கூடுதல் வரி காரணமாக வங்கி, நிதி, காப்பீடு, தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கும். அதே சமயம் GST வரி நடைமுறை, சேவைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.

தற்போது 15 சதவீத சேவை வரி செலுத்தும் வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு உள்ளிட்ட பெரும்பாலான சேவைகள் GST-யில் 18 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் வங்கி சேவைகள், தொலைபேசி, செல்போன் கட்டணங்கள் போன்றவை அதிகரிக்கும்.

ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்து உட்பட பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சேவைகளும் GST-யால் நெருக்கடியை சந்திக்க உள்ளன. தற்போது சேவை நிறுவனங்கள் தங்களது தலைமை அலுவலகங்களை நிறுவியுள்ள மாநிலத்தில் மட்டுமே பதிவு செய்து கொண்டு நாடு முழுவதும் சேவையை வழங்குகின்றன.

ஆனால் GST வரி அமலுக்கு வந்தால் அந்த நிறுவனங்கள் சேவை வழங்கும் அனைத்து மாநிலங்களிலும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. மாதந்தோறும் 3 முறை வீதம், ஆண்டுக்கு 37 முறை ஒவ்வொரு கிளையில் இருந்தும் GST வரி தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இதுபற்றி கூறுகையில், GST வரி நடைமுறை வங்கி துறை செயல்பாடுகளை கடினமாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மென்பொருள் தயாரிப்பு, ஊழியர்களுக்கு பயிற்சி என GST-க்கு தயாராக வங்கிகளுக்கே 2 மாதங்கள் பிடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் சேவை துறையின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகம். GST-யால் சேவை துறை பின்னடைவை எதிர்கொள்ள நேர்ந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.