May 8, 2017
.NEET ஆதரவு Mr. அறிவாளிகளுக்கு? ...
அப்பன் ஹிஸ்டரி தெரியாதவன் அலெக்சாண்டர் ஹிஸ்டரிபத்தி பேசர மாதிரி நீங்கள் இருக்கலாம் , அதுக்காக எங்க STD பத்தி சொல்லாம இருக்க முடியாது ...
இந்தியாவுலே 24 அரசு மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் தான் இருக்குது ( தனியார் இல்லாமல் ) எங்க அப்பன் ஆத்தா வரிப்பணத்தில் எங்க நெலத்த கொடுத்து கட்டுணது ...
இந்தியாவுலே அதிகமான MD. MS. MCh DM போன்றPG இடமும் தமிழ்நாட்டில் மட்டுமே ..
இதெல்லாம் எப்படி வந்துச்சு தெரியுமாடா அநாவசியத்து அவதாரங்களா ???
1879 ல மேரி ஸ்கார்லிப் MBBS படிச்சது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இதுல என்ன சிறப்பு தெரியுமா ?? , அந்த அம்மாவ இங்கிலாந்துல படிக்க விடல பொம்பளன்னு, அடிமை காலத்திலியே ஆண்ட ஆங்கிலேய பெண்ணுக்கு படிப்பு பிச்சை போட்டது தமிழ்நாடு தான் ...
அதே காலேஜில் அப்ப படிச்சவன் எல்லாம் "உயர்ந்தவன்னு" சொல்லிக்கிறவங்க.
ஏன் தெரியுமா அவன் நல்லா படிச்சவன்னு காரணம் இல்லை .. சமஸ்கிருதம் தெரிஞ்சாதான் படிக்கனும் னு ரூல்ஸ் போட்டிருந்தானுங்க அதனால்தான் ...
அப்பமும் ஒரு குடியானவன் பொண்ணு சமஸ்கிருதம் படிச்சு தேர்வாகி இந்தியாவுல மொத மொத MBBS படிச்சு பட்டம் வாங்குச்சு யார்னு தெரியுமா .?? Dr.முத்துலட்சுமி .. அப்பவும் அந்த அம்மாவுக்கு தடை போட பாத்தானுங்க என்ன காரணம் சொன்னானுங்க தெரியுமா ? ஒரு பொண்ணு படிக்குறதால அந்த பூணூல் போட்ட பாடுங்களுக்கு மனசு அலைபாய்ந்து டிஸ்ட்ராக்சன் ஆவுதாமாம் .. ??
Dr. AL முதலியார் னு மருத்துவ பேராசான் அவர் தான் பிரசவம் பற்றிய புக் எழுதியவர் எப்ப தெரியுமா 1937ல் இன்னிக்கு வரைக்கும் அவர் எழுதிய ஆப்ஸ்ட்ரடிக் புக் ஐ படிக்காம ஒருத்தன் கூட mbbs ஆவ முடியாது.. வேற எவன் எழுதினாலும் இவருடையதிலிருந்து பட்டி டங்கரிங் செஞ்சு தான் எழுதனும் ... சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் பேர்ல தனி பிளாக் ரோட்டுமேலேயே 2 மாடிபெரிய பில்டிங் இருக்கும் ...
இருதய மாற்று அறுவை சிகிச்சை
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை
இதெல்லாம் அரசு மருத்துவமனையில் இந்தியாவுலே இங்கே மட்டும் தான் ஏழைகளுக்கும் சாத்தியம் தனியார்ல 8 , 10லட்சம் செலவாகும் ..
கோல்டன் அவர்ல கொண்டு போனா எப்படி பட்ட தலையில அடிப்பட்ட கேசும் சென்னை ஜிஹெச் ல காப்பாத்திடுவாங்க.
கை கால் துண்டானா ஒரு மணி நேரத்தில் போனா ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர வச்சுடுவாங்க இந்தியாவில் வேறு எங்கடா இருக்கு இதெல்லாம் ... ??
இங்கே இத்தனையும் இலவசமாக ...
வெளி மாநிலங்களில் எல்லாம் சாதாரணமான ஆபரேஷனே அரசு மருத்துவமனையில் காசு கொடுத்து தான் பாக்கனும் இதுவாச்சும் தெரியுமாடா உங்களுக்கு ???
இங்கே வேலை பாக்குற அத்தனை டாக்டர்கள் ஏதோவொரு வகையில் இட ஒதுக்கீடு முறையில் வந்தவர்கள் தான் ...
என்னடா கொறஞ்சிடுச்சு இப்ப ??
எல்லா சாதிக்காரனும் டாக்டரா வந்ததுக்கு காரணம் எங்க பாட்டன் நீதிக்கட்சி முதல்வர் பனகல் அரசரும் .. என் தாத்தன் பெரியாரும் தான் சமஸ்கிருதம் இருக்க கூடாதுனு அதை எடுத்ததால தான் படிக்க முடிஞ்சுது, விதை போட்டது என் பாட்டனும் தாத்தனும் இன்னிக்கு ஆலமரமா நிக்குது ...
இது எங்க பாட்டன் சொத்து எவன்னே தெரியாத மூடி கேடி டெட்பாடி எடப்பாடி களுக்காக விட்டுக் கொடுக்க முடியாது ..
குடிசையில் பொறந்த எத்தனையோ பேர் டாக்டர் ஆனது தமிழ்நாட்டில் மட்டுமே வேற எந்த மாநிலத்தில் இப்படி இருக்கு காமிங்கடா மூளைய வாடகைக்கு விட்டவர்களே ...
இனிசியல் பேருக்கு மட்டும் இருந்தா போதாது வாழ்க்கைக்கும் வரலாறுக்குமே இனிசியல் இருக்கனும் எங்களுக்கு இருக்கிறது அது "தமிழ்நாடு" .
இனிசியல் இல்லாதவங்க வேணாம் னு சொல்றவங்க இங்கே இருக்க வேண்டாம் .. எங்கயாச்சும் தொட்டில் பண்ணாடைங்க திட்டம் இருக்கும் மாநிலமா பாத்து போய்டுங்க...
ஒரு தாழ்த்தப்பட்டவர் என்று கூறப்படுகிற சமூகத்தில் இருந்து வந்த
மருத்துவர்
#நீட்ஐநீக்கு
.NEET ஆதரவு Mr. அறிவாளிகளுக்கு? ...
Reviewed by மறத்தமிழன்
on
May 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.