திருவனந்தபுரம்: கேரளாவில் எம்எல்ஏ ஒருவர் சப்-கலெக்டரை காதலித்து மணமுடிக்க உள்ள தகவல் காட்டுத் தீ போல பரவி பரபரப்பாகக பேசப்பட்டு வருகிறது.
கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கே.எஸ்.சபரிநாதன். அருவிக்கரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்்கப்பட்டுள்ளார். இவர் சப்-கலெக்டர் திவ்யா ஐயரை மணமுடிக்க உள்ள தகவலை பேஸ்புக் வாயிலாக அறிவித்துள்ளார்.
திவ்யா, டாக்டருக்கு படித்து சப்-கலெக்டராக வேலை பார்க்கிறார். சபரிநாதனுக்கு 33 வயதாகும் நிலையில், திவ்யா ஒரு வயதில் அவரை விட இளையவர்.
அரசியல்வாதியும், அதிகாரியும் திருமணம் செய்துகொள்வது மிகவும் அரிதானது என்பதால் கேரளாவில் தற்போது இந்த திருமணம் குறித்துதான் மக்கள், சாயா கடைகளில் சாவகாசமாக உட்கார்ந்து விவாதித்து வருகிறார்கள்.
சபரிநாதனின் தந்தை காங்கிரஸ் கட்சியின் சீனியர் நிர்வாகிகளில் ஒருவர். அந்த காலத்திலேயே கல்லூரி பேராசிரியை காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர். இவர்களது காதல் கதை, மலையாளத்தில் திரைப்படமாகவே வெளியாகியுள்ளது. மம்முட்டி அதில் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல சபரிநாதனும் காதலித்தே திருமணம் செய்ய உள்ளார்.
இருவரது திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால், ஜூன் மாதம் கெட்டி மேளம்/சண்டை மேளம் முழங்க உள்ளது. தந்தையை போல ஓடிப்போய் திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நல்லவேளையாக சபரிநாதனுக்கு ஏற்படவில்லை.
சபரிநாதன் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கூறுகையில், நான் திவ்யா ஐயரை திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். நான் நெருக்கமானோம். எங்கள் நோக்கம், எண்ணம் அனைத்தும் ஒரே அலைவரிசை கொண்டதாக இருந்தது. இரு குடும்பத்தார் ஆசியோடு திவ்யாவை விரைவில் வாழ்க்கை துணையாக்க உள்ளேன். உங்களின் ஆசியும் எங்களுக்கு தேவை என்று கூறியுள்ளார். அப்புறமென்ன, 'துடக்கம் மாங்கல்யம், தன்துநானேனா' என்று பாடியபடி மணமக்களை வாழ்த்துவோம் வாருங்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.