May 16, 2017
ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, வரும் ஜூன் முதல் ஏழு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மாணவர்கள், இளைஞர்கள், கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககப்பட்டது. இதன்படி, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.
கடந்த காலத்தில் கோவில், சர்ச் விழாக்கள் என ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது. இதன்படி, அனுமதி கேட்டு, கிராம மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி உள்ளது என அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், கிராம மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜூன் முதல் விவசாய பணிகள் துவங்கிவிடும் என்பதால், ஜனவரி முதல் மே வரை மட்டுமே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உள்ளது. அதன்பின் விண்ணப்பம் அளித்தால் நிராகரிக்கப்படும்’ என்றார்.
ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.