May 9, 2017
உன் வீட்டு பொம்பளங்களை சொன்னா பத்தி எரியுதா?- டுவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு
நடிகை குஷ்பு வெளிநாடு போயும், நிம்மதியாக ஊரை சுற்றிப் பார்க்காமல் டுவிட்டரில் தனக்கு எதிராக பதிவிட்டவர்களுடன் சண்டை போட்டு வருகிறார்.
உன் வீட்டு பொம்பளங்களைப் பத்தி பேசுனா பத்தி எரியுதா? நானும் ஒரு இல்லத்தரசி, ஒரு மனைவி, ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி புரியுதாடா? என்று டுவிட்டரில் தன்னைப் பற்றி தவறாக கமெண்ட் செய்த நபரிடம் என்று சண்டை போட்டுள்ளார் நடிகை குஷ்பு.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, ஒரு நடிகையாக, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இல்லத்தரசியாக ரொம்பவே பிசியானவர். டுவிட்டர், ஃபேஸ்புக்கில் அதீத ஆர்வத்துடன் பதிவிடுவார்.
டுவிட்டரில் குஷ்புவை சீண்டி பலர் பதிவிடுவார்கள், அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பார் குஷ்பு. இது பலமுறை நடந்துள்ளது. மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே டுவிட்டரில் குஷ்புவின் கோபச்சண்டை தொடர்கிறது.
செலக்டிக் அம்னீசியா
மோடி கேதார்நாத் ஆலயத்தில் தரிசனம் செய்த படத்தைப் போட்டு விமர்சனம் செய்திருந்ததார் நடிகை குஷ்பு. செலக்டிவ் அம்னீசியா என்றும் கூறியிருந்தார்.
என்ன தகுதி இருக்கு?
மோடிய பற்றி பேசறதுக்குன்னு சில தகுதிகள் வேண்டும்! அது உனக்கு இருக்கான்னு முதல்ல சுய பரிசோதனை செய்து பார்த்துட்டு வா. என்று பதிலுக்கு பதிவிட்டார் ஒருவர்
யார் கூத்தாடி?
குஷ்புவை கூத்தாடி என்று ஒருவர் கூறவே, கோபம் கொண்டு கொந்தளித்த குஷ்பு, உன் வீட்டு பொம்பளங்களைப் பத்தி பேசுறயாடா? என்று பதிவிட்டார்.
மனிதனே இல்லை
குஷ்புவை முஸ்லீம் பெண் என்று போட்டு ஒருவர் கிண்டடித்திருந்தார். தலாக் பற்றி பேசுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். மதம் பேசுபவர்கள் மனிதனே இல்லை என்றும் கூறியிருந்தார் குஷ்பு.
நானும் ஒரு இல்லத்தரசி
குஷ்புவின் பேச்சு அந்த நபருக்கு கோபத்தை வரவழைத்து விட்டதோ என்னவோ? ஆபாசமாக பேசுவதா என்று கேட்டார். அதற்கு குஷ்புவோ, உன் வீட்டு பொம்பளங்களைப் பத்தி பேசுனா பத்தி எரியுதா? நானும் ஒரு இல்லத்தரசி, ஒரு மனைவி, ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி புரியுதாடா? என்று பட்டென்று கூறி பொட்டில் அடித்தார் குஷ்பு. வெளிநாடு போயும் விடாமல் டுவிட்டரில் சண்டை போடுவது ஏன் குஷ்பு.
உன் வீட்டு பொம்பளங்களை சொன்னா பத்தி எரியுதா?- டுவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.