Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

நீட் தேர்வில், நூதன முறையில் காபி அடிப்பதை தடுக்கவே கடுமையாக நடந்துகொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது: பொன் ராதாகிருஷ்ணன்


நீட் தேர்வில் நூதன முறையில் காபி அடிப்பதை தடுக்கவே மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் கட்டாயம் ஏற்பட்டதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். நார்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாட்டின் பல இடங்களில் தேர்வின்போது தவறுகள் நடப்பதாக கூறியுள்ளார். எனவே நீட் தேர்வின்போது மாணவ, மாணவிகளிடம் கடுமையாக நடந்துகொள்ளும் நிலை ஏற்பட்டதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காது அணிகலன்களில் கூட விடைகளை பதிவு செய்து கேட்கும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் அவற்றை அகற்றிவிட்டு தேர்வுக்கூடங்களில் மாணவிகள் அனுமதிக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே அறிவுரைகள் வழங்கப்பட்டு வந்ததாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தேர்வு எழுதியவர்களை அவமதிப்பது மத்திய கல்வி வாரியத்தின் நோக்கம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் மாணவர்கள் அவமதிக்கபட்டதாக கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.