May 18, 2017
காஷ்மீரில் பாஜக பி டி பி மோதல் : பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக முடியாது பி டி பி போர் கொடி
ஜம்மு காஷ்மீரில் பா.ஜனதாவை சேர்ந்தவர் முதல்-மந்திரியாக வேண்டும் என அக்கட்சி விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், பிடிபி ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பயங்கரவாதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள், பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல்-மந்திரியாக இருக்கும் மெகபூபா முப்திக்கு கடும் நெருக்கடியானது உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டால் நிலைமை சரியாகுமா? என்றால் பா.ஜனதா உயர்மட்ட தகவல்கள் ஆம் என்கிறது.
இது தொடர்பாக மெகபூபா முப்தியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மெகபூபா முப்தி சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்ட போது, கூட்டணி கட்சிகள் முதல்-மந்திரி சுழற்சி அடிப்படையில் மாற்றிக் கொள்வது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது. உயர்மட்ட அளவில் பல சந்தர்ப்பங்களில் இது தொடர்பாக மெகபூபா முப்தியுடன் பேசப்பட்டு உள்ளது. முதல்-மந்திரியை மாற்றுவதன் மூலம் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் அதிருப்தியை மாற்ற முடியும் என நம்புகிறது, ஆனால் மெகபூபா முப்தி அதனை ஏற்க மறுத்துவிட்டார் என தகவல்கள் தெரிவித்து உள்ளன என ஆங்கில மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக எந்தஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என பா.ஜனதா தலைவரும், உதாம்பூர் எம்.பி.யுமான ஜிஜேந்திர சிங் கூறிஉள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஸ்ரீநகர் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, இதுபோன்ற நடவடிக்கையானது தோல்வியில்தான் முடியும், மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அனைத்து தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என கூறிஉள்ளார்.
காஷ்மீரில் பாஜக பி டி பி மோதல் : பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக முடியாது பி டி பி போர் கொடி
Reviewed by மறத்தமிழன்
on
May 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.