Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2017

ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் மனைவி குத்திக் கொலை! மகன் கடத்தல்?


ஷீனாபோரா கொலை வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போரா கொலை வழக்கு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.

இந்த நிலையில் கொலை வழக்கை விசாரித்த டீமை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரின் மனைவி அவரது வீட்டுக்குள் வைத்தே குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடு திரும்பினார்
மும்பையின் சாந்தாக்ரூஸ் பகுதியில் இன்ஸ்பெக்டர் தியானேஸ்வர் கனோர் வீடு உள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு பணி முடிந்து இன்ஸ்பெக்டர் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

செல்போனுக்கு அழைப்பு
வீட்டுக் கதவை தட்டியும் திறக்கப்படாததால், மனைவி செல்போனுக்கு தொடர்புகொண்டுள்ளார். அது நாட் ரீச்சபிள் என வந்துள்ளது. பிறகு எப்படியோ வீட்டுக்குள் சென்றுள்ளார் தியானேஸ்வர்.

கத்தியால் குத்தி கொலை
அங்கு தரையில் அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அருகே ரத்தக் கறையோடு கத்தி கிடந்துள்ளது. வீட்டுக்குள் இருந்த அவரது மகனும் மாயமாகிவிட்டார். அவரது போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறதாம்.

இன்ஸ்பெக்டர் மகனை எங்கே?
இன்ஸ்பெக்டரின் மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிரார்கள். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.