May 9, 2017
எமனாக மாறிய முகநூல் நட்பு.. கோவை ஆசிரியையை கார் ஏற்றிக் கொன்ற சென்னை நபர்!
முகநூல் மூலம் பழக்கமான கோவை ஆசிரியையை கார் ஏற்றிக் கொன்றதாக சென்னையைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா (49). அங்கு ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அவரது மகள் சென்னையில் தங்கிப் படிக்கிறார். நிவேதிதாவுக்கு சென்னையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் முகநூல் மூலம் பழக்கமானார். இளையராஜா தீயணைப்புப் படையில் பணியாற்றி வருகிறார்.
மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர்-வீடியோ..
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சென்னைக்கு மகளைப் பார்க்க வந்தார் நிவேதிதா. வந்தவர் இளையராஜாவைப் பார்க்கப் போயுள்ளார். போன இடத்தில் என்ன நடந்து என்று தெரியவில்லை. தனது காரை ஓட்டி நிவேதிதா மீது மோதி கொடூரமாகக் கொன்றுள்ளார் இளையராஜா.
இந்தக் கொலை தொடர்பாக இளையராஜாவைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்குள் என்ன தகராறு, கொலை செய்யும் அளவுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எமனாக மாறிய முகநூல் நட்பு.. கோவை ஆசிரியையை கார் ஏற்றிக் கொன்ற சென்னை நபர்!
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.