Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2017

சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த மாணவி காயத்ரியின் மரணத்துக்கு காரணம் என்ன?


மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த மாணவி காயத்ரியின் மரணத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து அவரது அறைத்தோழிகள் விளக்கம் அளித்தனர்.

சேலம் மேட்டூர் பாரதிநகரை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் காயத்ரி (வயது 23). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னை திருமங்கலம் அருகே கலெக்டர் நகரில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி, சென்னை அண்ணாநகரில் உள்ள மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

கடந்த 18-ந்தேதி விஷம் குடித்த நிலையில் மாணவி காயத்ரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 20-ந்தேதி அவர் உயிரிழந்தார்.
மாணவி காயத்ரி உயிரிழந்தது தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவரது மரணத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து அவரது அறைத்தோழிகள் இந்துமதி, ஜெயலட்சுமி, சந்தியா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

காயத்ரி

கடந்த 18-ந்தேதி மாலை ஏ.டி.எம். சென்று வருவதாக கூறி காயத்ரி விடுதியில் இருந்து வெளியே சென்றாள். சிறிது நேரம் கழித்து வந்தவள், தனது மாமா வந்திருப்பதாக கூறி மீண்டும் அறையில் இருந்து வெளியே சென்றாள். வெகுநேரம் ஆனதால் காயத்ரிக்கு போன் செய்தோம். ஆனால் அவள் எடுக்கவே இல்லை.

இந்தநிலையில் புதிய எண்ணில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தான் காயத்ரியின் மாமா என்றும், காயத்ரி கீழே தான் இருக்கிறாள். வீட்டு பிரச்சினை காரணமாக அரளி விதையை தின்றுவிட்டதாக கூறுகிறாள். அவள் பொய் சொல்கிறாளா? என்று தெரியவில்லை. கீழே வந்து அவளுக்கு ஆறுதல் சொல்லுங்கள் என்று கூறினார்.

அரளி விதைகளை தின்று...

இதன்பிறகு நாங்கள் கீழே சென்று பார்த்தோம். அங்கு காயத்ரியிடம், உனக்கு ஏதாவது பிரச்சினையா? அப்படி இருந்தால் வெளிப்படையாக சொல்லிவிடு. ஏதாவது அரளி விதையை தின்றாயா? உண்மையை சொல். இல்லாவிட்டால் அனைவருக்கும் பிரச்சினை என்று கேட்டோம்.

அதற்கு காயத்ரி, ஆமாம் 4 அரளி விதைகளை தின்றுவிட்டேன். அதில் பாதியை துப்பிவிட்டேன் என்றாள். உடனே காயத்ரியின் மாமா பிரபுக்கு போன் செய்து தகவலை கூறினோம். அவர் கூறியபடி காயத்ரியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு ஐ.சி.யூ. பிரிவுக்கு மாற்றப்பட்டாள்.

குடும்ப பிரச்சினை

காயத்ரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் தகவல் அறிந்து அவரது பெற்றோர், அக்கா வந்துவிட்டனர். அப்போது காயத்ரியின் அம்மா, ‘காயத்ரி எப்போதும் அவள் அப்பாவிடம் தான் மனம் விட்டு பேசுவாள். உங்களை மாதிரி தான் அவளது அத்தானையும் (அக்கா கணவர் பிரபு) நினைத்தேன். ஆனால் அவர் காயத்ரியிடம் தவறாக நடந்துகொண்டார்’, என்று கூறி அழுதார்.

பின்னர் காயத்ரியின் அக்கா ஜோதியை திட்டினார். அப்போது, ‘உன்னை நம்பிதானே படிக்க அனுப்பினோம். இப்படி நடந்துவிட்டதே’, என்று புலம்பினார். நான் ஊருக்கு போன சமயத்தில் இப்படி நடந்திருக்கிறது. நான் என்ன செய்வது என்று ஜோதியும் கூறி அழுதார்.

அதன்பிறகு தான் காயத்ரியின் வீட்டில் பிரச்சினை என்பதும், அதனால் தான் அரளி விதையை அவள் தின்று தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறாள் என்பதும் எங்களுக்கு தெரியவந்தது. இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி சிகிச்சை பலனின்றி காயத்ரி இறந்துவிட்டாள்.

மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தனர்.

அக்கா கணவர்

காயத்ரியின் மரணம் குறித்தும், அவரது மரணத்துக்கு அவரது அக்கா கணவர் பிரபு என்பவர் தான் காரணமாக இருக்கலாம் என்று காயத்ரியின் அறைத்தோழிகள் கூறியதை தொடர்ந்து இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.