May 18, 2017
ரஜினி மண்டையில் என்ன இருக்கு ? ஒண்ணுமே இல்லை – அசிங்கப்படுத்திய கட்ஜூ !
அமிதாப்பச்சனை போன்று ரஜினிகாந்த் தலையில் ஒன்றும் இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நக்கலடித்துள்ளார்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள ரஜினியை பற்றி கட்ஜு இப்படி தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
அரசியலுக்கு வருவது பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த 15ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசியதில் இருந்து ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தென் இந்தியர்கள், மீது நான் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்களை போற்றி வணங்கும் அவர்களின் முட்டாள்தனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தென் இந்தியர்கள் ரஜினி மீது பைத்தியமாக உள்ளனர். அதிலும் சிலர் அவர் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் ரஜினியிடம் அப்படி என்ன தான் உள்ளது?
வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவ வசதிகள் இன்மை உள்ளிட்ட எதற்காவது ரஜினியிடம் தீர்வு உள்ளதா?
அப்படி இருக்கும்போது ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சனை போன்றே ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மார்க்கண்டேய கட்ஜூவின் இந்த கருத்தால் ரஜினி ரசிகர்களை சீண்டியதோடு அமிதாப் ரசிகர்களை மீண்டும் சீண்டியது அவரது ரசிகர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.
ரஜினி மண்டையில் என்ன இருக்கு ? ஒண்ணுமே இல்லை – அசிங்கப்படுத்திய கட்ஜூ !
Reviewed by மறத்தமிழன்
on
May 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.