Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2017

அமெரிக்காவில் மீண்டும் இனவெறி சிகரெட் விற்க மறுத்ததால் சீக்கியர் குத்திக் கொலை


சிகரெட் விற்க மறுத்ததால் சீக்கிய வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மோடெஸ்டோ நகரில் வசித்தவர் ஜக்ஜீத் சிங் (32). இவர், தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து மளிகைக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பஞ்சாப் மாநிலம் கபுர்தலா நகரை சேரந்த ஜக்ஜீத் சிங், கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்புதான் அமெரிக்கா சென்றிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஜக்ஜீத் சிங் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஒருவர் சிகரெட் கேட்டு கடைக்கு வந்துள்ளார். அவரின் அடையாள அட்டை காட்டுமாறு ஜக்ஜீத் சிங் கூறியதற்கு அந்த நபர் மறுத்துள்ளார். அடையாளம் தெரியாதவருக்கு சிகரெட் விற்க முடியாது என ஜக்ஜீத் சிங் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அரை மணி நேரம் கழித்து கத்தியுடன் வந்து ஜக்ஜீத் சிங்கை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜக்ஜீத் சிங்கை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஜக்ஜீத் இறந்தார். இதுதொடர்பாக மோடெஸ்டோ போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஆனால், போலீஸ்  விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சீக்கிய மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. கொலையாளி பற்றி எந்த தகவலையும்  கண்டுபிடிக்காத போலீசார், இனவெறி தாக்குதலா என்பது குறித்து தகவலையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமெரிக்க தூதர் நவ்தேஜ் சர்ணாவை தொடர்பு கொண்டு உடனடியாக அறிக்கை அளிக்க  உத்தரவிட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் 3வது கொலை
கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே வாரத்தில் 3வது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த  3ம் தேதி, சான்ஜோசில் சிலிக்கான் வேலி ஐடி ஊழியர் நரேன் பிரபு, அவரது மனைவி இருவரும் அவர்கள் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நரேன் பிரபுவின் மகள் மிர்சா தாட்லிக்கின் முன்னாள் காதலன் பழிவாங்கும் வகையில் இத்தகைய செயலை செய்ததாக விசாரணையில் தெரிந்தது.  மிர்சாவும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார். 4ம் தேதி, மிச்சிகன் பகுதியில் இந்திய டாக்டர் ரமேஷ் குமார் அவரது காரில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.