Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2017

பயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் அனுப்பும் வட கொரியா


பயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு வட கொரியா கப்பலில் அனுப்புவதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆஸ்திரேலியாவின் திங் டேங் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில், வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கப்பலில் கடத்துகிறது.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை சார்ந்தே வட கொரியாவுக்கு அமெரிக்காவை தாக்கும் திறன் உள்ளதா தங்களால் இது முடியும் என காட்ட தான் வட கொரியா சீனா வழியாக மீன் பிடி கப்பல் மற்றும் நீர் மூழ்கி கப்பல் மூலம் அணு ஆயுதங்களை கடத்தி உலக நாடுகளுக்கு எடுத்து செல்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கப்பலின் கண்டெயினர்களில் அணு ஆயுதங்கள் கடத்தபடுவதாகவும், கப்பல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்படுவதால் அதை அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

வட கொரியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு அணு ஆயுதங்களை கடத்தி சென்று அதை அங்கு வெடிக்க செய்வதாக பயமுறுத்தினால், தங்களை தாக்க நினைக்கும் அமெரிக்கா அதிலிருந்து பின் வாங்கும் என வட கொரியா நினைக்கிறது.

உலகம் முழுவதும் 1.70 கோடி கண்டெய்னர்கள் கப்பல்களில் உலா வருவதால் அணு ஆயுதங்கள் உள்ள கண்டெய்னர்களை கண்டுபிடிப்பது கடினம் என்பதை உணர்ந்தே வட கொரியா இதை செய்வதாக திங் டேங் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

வட கொரியாவை குறைத்து மதிப்பிட்டால் மிக பெரிய உயிர் இழப்புகளும், பொருளாதார இழப்புகளையும் உலகம் சந்திக்ககூடும் எனவும் திங் டேங் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.