Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2017

தயவுசெய்து இரவில் இந்தப் பதிவை படிக்க வேண்டாம்..! அப்புறம் நாங்கள் பொறுப்பல்ல..!


பாபு மிக நல்ல மனிதன். மனைவி வினிதா மீது  உயிரையே வைத்திருந்தான்.வினிதாவும் நல்ல பெண்ணாகத்தான் இருந்தாள்.
கணவன் நடத்திய கடை லாஸ் ஆகும் வரை. திருச்சி பாலக்கரையில் கடையும் கொஞ்ச தூரத்தில் லீஸ் வீடும் எடுத்திருந்தான் பாபு.
காலை கடைக்கு போனால் இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்புவான். அடித்துப் போட்ட மாதிரி தூங்கிப் போவான்.
தினமும் கிடைக்கும் ஆயிரங்களை அப்படியே மனைவியிடம் கொடுக்க அவள் வங்கியில் போட்டுவிடுவாள்.
வினிதாவிற்கு தன்னை அலங்கரித்துக் கொள்ள மிகவும் பிடிக்கும். விதவிதமான புடவைகள், நகைகள்  வாங்கிக் கொள்வாள். வாரம் ஒருமுறை அழகுநிலையம் சென்று விடுவாள். பழங்கள் நிறைய சாப்பிடுவாள்.

அதனால் உடம்பில் ஒரு மினுமினுப்பு இருந்தது. நல்ல கலர்வேறு..! ரோட்டில் நடந்து போகும்  ஆண்களும்  வினிதாவைப் திரும்பிப்பார்க்காமல் செல்ல முடியாது.


 அதில் வினிதாவிற்கு நிறைய சந்தோசம். ஆயிரம் இருந்தாலும் கணவன் பாபு தன்னை சீண்டுவதில்லை என்கிற ஏக்கம் அவளுக்கு நிறையவே உண்டு.
இவளை ஒரு முறை பார்த்து விட்டார், அந்த அரசியல் பெரும்புள்ளியின் தம்பி..! சொக்கிப்  போனார்…!
இப்படி ஒரு அழகியா..யாருடா இது..? அல்ல கைகள் மொத்த ஜாதகத்தையும் இரண்டே நாளில் கொடுத்துவிட்டனர்.
அழகுநிலையப் பெண் பொறுப்பு எடுத்துக் கொண்டார். ஒரே வாரத்தில் வினிதாவை மடக்கி அரசியல் தம்பியின் பண்ணை வீட்டிற்கு கொண்டு போய்விட்டானர்.

எடுத்த எடுப்பில் வைர நெக்லஸ் எடுத்து கழுத்தில் மாட்ட ஆடிப்போனாள் வினிதா. காதல் வசனங்கள் பேசி வீழ்த்தி வீட்டார்.

 சொக்கிபோனார் அரசியல் தம்பி. இவளை நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடிவு செய்தார். விலை உயர்ந்த செல்போன், நகைகள் பட்டுப் புடவைகள் என்று அசத்தினார்.
இது எதுவும் அந்த அப்பாவி கணவனுக்கு தெரியாது. ஊட்டிக்கு அழைத்தார் அரசியல் வாரிசு. பொய் சொல்லிவிட்டு கூடவே போனாள் வினிதா.
ஒருவாரம்  உல்லாசத்தில் திகைத்தார்கள். அங்கு தான் கணவனை முடித்துவிட நூல் விட்டார் அரசியல் தம்பி. ஒரு கொசுவர்த்தி சுருள் சில திட்டங்கள்.

பாபு தூங்கும் போது அப்படியே செய்தாள். இரவு படுக்கையில் கருகிப் போனான் அந்த அப்பாவி கணவன் பாபு..! வினிதா மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் அரசியல் செல்வாக்கில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

யாரும் எதிர் பாராத வகையில் அந்த அரசியல் வாரிசு  கொலை செய்யப் பட்டார்.  வாரிசு இறந்து போனதும்,  போலீஸ் மீண்டும் பாபு மரணத்தை தூசி தட்ட வகையாக மாட்டினாள் வினிதா.
ஆனாலும் ஏனோ தெரியவில்லை..! வெளியே வந்து விட்டாள் வினிதா. இப்போது கேரளாவில் போய் முடங்கிக் கொண்டாள் வினிதா. அவளை கொலைகாரி என்று சொல்லி உறவுகள் ஒதுக்கி விட்டது.
ஒரு விஷயத்தை பெண்கள்  புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு  கணவன் கொலை செய்யப்பட்டதும் போலீசீன் முதல் சந்தேகம் மனை மீது தான் எழும். காரணம் சமீப காலத்தில் பெருகிவிட்ட கள்ளக் காதல் கொலைகள்..
அதில் மாட்டிக் கொண்டு சிக்கும் பெண்கள்,மற்றும் கள்ளக்காதலன்.. என்னதான் பார்த்து பார்த்து திட்டங்கள் போட்டு நாடகமாடினாலும் போலீஸ் நோண்டி எடுத்து விடும் என்பதே யதார்த்தம்.
கொலை செய்து விட்டபின் கணவன் இறந்து போகிறான். மனைவி மாட்டிக் கொள்கிறாள். கள்ளக்காதலன் மாட்டுகிறான் என்பது நேரடியான பாதிப்புகள்..!
ஆனால், வெளியே தெரியாத பாதிப்புகள் என்பது குழந்தைகள் தெருவிற்கு வருகிறது..உறவுகள் வெட்கி தலைகுனிகிறது. அவமானப்பட்டு பெற்றவர்கள் நொறுங்கிப் போகிறார்கள்…!
செக்ஸ் என்பது சில நிமிட சந்தோசங்கள்..ஆனால் குற்றம் என்பது ஆயுள் முழுக்க தண்டனைகள் எல்லோருக்கும்…!
கொஞ்சம் யோசிப்போம் நண்பர்களே..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.