May 21, 2017
சரிந்தது சைதையின் கோட்டை..! படிக்க வந்த இடத்தில் துடித்து நின்றது உயிர்: சைதை துரைசாமியின் ஐ.ஏ.எஸ்
சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மையம் சென்னை அண்ணாநகரில் துவக்கப்பட்டுள்ளது.
சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையம் சென்னை சி.ஐ.டி. நகரில் தொடங்கப்பட்டது.
முதல் ஆண்டிலேயே இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 12 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர்.
கடந்த ஆண்டு 25 பேர் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை அண்ணாநகரிலும் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சைதை துரைசாமியின் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், அருளழகி இவர்களுக்கு காயத்திரி, வினோத்குமார் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
காயத்திரி பி.இ., படித்து விட்டு சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்து உயிருக்குப் போராடியிக்கிறார். உடனே அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் காயத்திரியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை மட்டும் வரச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த காயத்திரி நேற்று இரவு மரணம் அடைந்துள்ளார். உடனே பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக மாணவியின் வீடு உள்ள மேட்டூருக்கு காயத்திரியின் உடலை அனுப்பி வைத்து விட்டார்கள்.
இதனால் காயத்திரி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, காயத்திரியின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் உடலை நடு ரோட்டில் வைத்துப் போராடினார்கள்.
பிறகு மேட்டூர் கருமலைகூடல் போலீஸார் சமாதானம் செய்த பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சரிந்தது சைதையின் கோட்டை..! படிக்க வந்த இடத்தில் துடித்து நின்றது உயிர்: சைதை துரைசாமியின் ஐ.ஏ.எஸ்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.