Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2017

விழித்துக்கொள் தமிழா..! இல்லையேல் புதைக்கப்படுவாய்…..கையிலோ , கழுத்திலோ , நெஞ்சிலோ எதையும் சுமக்காத


சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியையும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியையும் ஒன்றாக இணைக்க சமீபத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அ.தி.மு.க.வினர் ஒன்றுபட்டால்தான் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற முடியும் என்பதால் இரு அணிகளையும் இணைக்க சிலர் மனப்பூர்வமாக ஆதரவு கரம் நீட்டினார்கள்.
ஆனால் சிலர் தங்களின் இப்போதைய பதவியும் அந்தஸ்தும் பறிபோய் விடும் என்ற பயத்தில் இணைப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர்வு விவகாரம் போன்றவை குறித்து பேசியதாக கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் பற்றியே அதிகம் பேசினார்கள். குறிப்பாக அ.தி.மு.க. அம்மா அணியினரின் செயல்பாடுகள் பற்றி ஓ.பி.எஸ். விளக்கமாக பிரதமரிடம் எடுத்துக் கூறினார்.
மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து எதையுமே செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
அ.தி.மு.க. இரு அணிகளையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது உறுதியாகியுள்ளதால்,
ஜூலை மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்பதும் உறுதியாகி விட்டது. கடந்த 2002, 2007, 2012-ம் ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போதும் பா.ஜ.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே பா.ஜ.க.வை மீண்டும் ஆதரிப்பதில் அ.தி.மு.க.வினருக்கு எந்த தயக்கமும் இருக்காது.
அரசியலை மையப்படுத்தியே ஆட்சி நகர்வதால் தமிழக மக்கள் ஆளுமை இல்லாத அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் தங்கள் உரிமையை மீட்டுக்க ஆயுதம் ஏந்தி போராயதையே இலங்கையில் அடக்கி விட்டார்கள்.
இங்கு நாம் கையில் ஆயுதம் ஏந்தவில்லை, கழுத்தில் சைனைடை தாங்கவில்லை, விடுதலை கனவை நெஞ்சினில் சுமக்கவில்லை!
இவைகளை தாங்கி பயணித்த அவர்களுக்கே அந்த நிலை என்றால்?
கையிலோ , கழுத்திலோ , நெஞ்சிலோ எதையும் சுமக்காத நமக்கு நாளை என்ன நிலையோ?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.