Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

பதஞ்சலி' ராம்தேவின் அடுத்த திட்டம்: மின்சாரம்!


ஏழைகளுக்கு உதவி செய்யவும், காளைகளின் உயிரைக் காக்கவும் பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம், மின்சார உற்பத்தித் துறையில் கால்பதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

காளைகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளதால் விரைவில் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்படும் என 'பதஞ்சலி' நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் அடிமாட்டிற்காகக் கொண்டு செல்லப்படும் காலைகளைக் காப்பாற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பதஞ்சலி நிறுவனத்தின் பாலகிருஷ்ணா கூறுகையில், 'ஒன்றரை ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. காளைகளைப் பயன்படுத்தி 2.5 கிலோவாட் மின்சாரம் எடுக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமும், ஒரு துருக்கி நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்' என்றார்.

இந்திய சந்தைகளில் உணவுப் பொருட்களிலிருந்து ஒப்பனைப் பொருட்கள், உணவகத் தொழில் என அனைத்திலும் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவாலாக 'பதஞ்சலி' நிறுவனம் உருவாகும் என பாபா ராம்தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

சிலமாதங்களுக்கு முன் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்திய ராணுவ கேன்டீன்களில் ராணுவம் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.