Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2017

விவசாயிகளின் நலன் பற்றி பேச பா.ஜனதாவிற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது - தமிழிசை


விவசாயிகளின் நலன் பற்றி பேச பா.ஜனதாவிற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பாரதீய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு மற்றும் இணைப்பு விழா நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழக பா.ஜனதா விவசாய அணி தலைவர் பொன்.விஜயராகவன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ வரவேற்று பேசினார். மாநாட்டில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:–

விவசாயிகளுக்கு மன நிறைவை தந்து கொண்டிருக்கும் ஆட்சி பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிதான். இங்குள்ள திராவிட கட்சிகளுக்கு விவசாயிகளை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. இவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள். தமிழகத்தில் விவசாயிகள் மின்சாரத்திற்காக போராடியபோது, விவசாயிகளை சுட்டுக் கொன்றது திராவிட முன்னேற்ற கழகம். பிரதமர் மோடியைப் பற்றியோ, விவசாயிகளை பற்றியோ பேசுவதற்கு தி.மு.க. விற்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால் விவசாயிகள் பற்றியும், விவசாயிகள் நலன் பற்றியும் பேசுவதற்கு பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டும்தான் தார்மீக உரிமை இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு
விவசாயிகளுக்கு ஒரு இன்னல் என்று சொன்னால், அந்த இன்னலை போக்குவதற்கு முதல் ஆளாக வந்து நிற்பவர் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி. காவிரியில் நமக்குத் தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தந்தாக வேண்டும். இன்றைக்கு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் தண்ணீர் தரமறுக்கிறது.

இந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிற தி.மு.க. கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதா? நதிகளை இணைக்க முடியாது என்று சொன்னவர் ராகுல்காந்தி. அவர்களுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது. டெல்லியில் அய்யாக்கண்ணு நதிகளை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடிய கூட்டத்தில் ராகுல்காந்தி போய் உட்கார்ந்திருந்தார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். போராட்டக்காரர்களிடம் யார்யாரோ பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பிரதமரால் முடியும்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. கடைசியாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னார் உடனே போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டார்கள். இப்போது விவசாயிகளின் பிரச்சினை முடிந்துவிட்டதா? விவசாயிகளின் பிரச்சினைகளை முடித்து வைக்க பிரதமரால் தான் முடியும். அதை செயல்வடிவத்திற்கு கொண்டு வருவது தமிழக அரசின் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை மந்திரி பர்சோத்தம் ரூபாலா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.