May 6, 2017
விசா பெறுவதில் புதிய கட்டுப்பாடுகள்.. பேஸ்புக், டிவிட்டர் கணக்கை கேட்டும் டிரம்ப் அரசு..!
விசா பெறுவதில் புதிய கட்டுப்பாடுகள்.. பேஸ்புக், டிவிட்டர் கணக்கை கேட்டும் டிரம்ப் அரசு..!
அமெரிக்கா விசா அளிப்பதில் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், தற்போது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதலின் படி அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலை முழுமையாகக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்காவின் டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட் அறிவித்துள்ளது.
சமுக வலைத்தளம்
ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசு அளிக்கும் 65,000 விசாக்களின் விண்ணப்பதாரர்கள் இனி தங்களது சமுக வலைத்தளக் கணக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்
அமெரிக்க அரசு அறிவித்துள்ள இப்புதிய விதிமுறைகள் தங்களது நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வும், மேலும் சந்தேகத்திற்கு உரியவர் எனக் கருதப்படும் நபரை முழுமையாகக் கண்காணிக்க இது மிகப்பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ளது டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட்.
சந்தேகிக்கப்படும் நபர்
இப்படிச் சந்தேகிக்கப்படும் நபர், அவர் வைத்திருந்த முந்தைய பாஸ்போர்ட், 5 வருடங்களாகப் பயன்படுத்திய சமுக வலைத்தளக் கணக்குகள், ஈமெயில் முகவரிகள், போன் நபர் மற்றும் 15 வருடங்களின் இருப்பிட முகவரிகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
மேலும் கணக்கில் பாஸ்வேர்ட் அளிக்கத் தேவையில்லை எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.
முதல் படி
இந்த அறிக்கை அமெரிக்காவில் ஒப்புதல் பெற்றால், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நுழைய டிரம்ப் விதித்த தடைகள் மிகப்பெரிய அளவில் வெடிக்க இது முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்கக் கனவு
தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகள் அமெரிக்கக் கனவு உடைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக விளங்கி வருகிறது.
விசா பெறுவதில் புதிய கட்டுப்பாடுகள்.. பேஸ்புக், டிவிட்டர் கணக்கை கேட்டும் டிரம்ப் அரசு..!
Reviewed by மறத்தமிழன்
on
May 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.