Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2017

சிங்கம் இறைச்சி நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா?, செம்ம டேஸ்ட் … ஒரு கிலோ எவ்வளவு?… எங்கு கிடைக்கிறது?


பாகிஸ்தானின், கராச்சி நகரில், சிங்கத்தின் இறைச்சி விற்கப்படுவதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கத்தின் இறைச்சி மிக எளிதில் கிடைக்காது எனவும், குறைந்தது ஒரு கிலோ இறைச்சி பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 3 லட்சம் வரை விற்கப்படுவதாகவும், தள்ளுபடி விலையில் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் 2 கிலோ ரூ 5 லட்சத்திற்கும், 5 கிலோ ரூ. 10 லட்சத்திற்கும் விற்கப்படுவதாகக் கூறப்பட்டது.
மேலும், சிங்க இறைச்சி திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விற்கப்படுவதில்லை என்றும் விற்பனையாளர் பிலால் பெய்க்  எனவும் கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ் ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் அவரது தொடர்பு விவரங்களும் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல், www.bilalbaig.dawaza.pk.com என்று பரவி வரும் வலைதள முகவரியும் கொடுக்கப்பட்டது.
ஒரு சிங்கத்தை கொன்று அதன் தோலை உரிப்பது போல வெளியான புகைப்படத்தால் பரவிய இந்த செய்தி முற்றிலும் பொய், வெறும் புரளி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படம் மற்றும் தகவல் குறித்து ஆராய்ந்த பாகிஸ்தான் ஊடகங்கள் இது முற்றிலும் பொய்  என்று கூறியுள்ளது.
பாகிஸ்தானில், இறைச்சிகளுக்காவே தனியே கவர்ச்சியான சந்தை உள்ள போதிலும், சிங்கத்தின் இறைச்சி விற்பனை குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.