Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2017

அமெரிக்கா விசா பெற நூதன வழிபாட்டில் இறங்கும் இந்தியர்கள் ! உருவானது விசா கோவில்?


உலகிலேயே அதிக மூளை திருட்டில் ஈடுபடும் நாடு என்ற பெயர் அமெரிக்காவிற்கு உண்டு, அதாவது வெளிநாட்டு அறிவாளிகளை தன்னுள் ஈர்த்துக் கொண்டு அவர்களின் திறமையை அமெரிக்காவின் திறமையாக வெளிக்காட்டும். நாடு அமெரிக்கா

அதேபோல், இந்தியாவில் நமது வரிப்பணத்தில் படித்துவிட்டு
அமெரிக்காவிற்கு தங்களின் உழைப்பை தாரைவார்க்கச் செல்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று நினைத்ததும் உண்டு ஆனால் அமெரிக்காவிற்கு செல்பவர்கள் எல்லாம் சிந்திக்கும் திறனுடையவர்கள் அல்ல என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரமிது.

டிரம்ப் எனும் வாலண்டியர் கோமாளி அமெரிக்கா ஜனாதிபதியானது முதல் பல்வேறு துக்ளக் தர்பார் சட்டங்களை போட்டு வருகின்றார், அதில்  “H-1B” எனும் வரம்புகள் உயர்த்தப்பட்ட வேலைவாய்ப்பு விசா தடையும் ஒன்று. இதனால் உலக நாடுகள் பல பாதிக்கப்பட்டாலும் இந்தியர்கள் அதில் முதன்மையானவர்கள். இந்தத் தடையை உடைக்க என்ன செய்யலாம் என யோசித்த இந்தியர்கள் சிலர் கண்டுபிடித்த குறுக்குவழியே விசா கோயில் வழிபாடு.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர் பகுதி சில்கூர். இங்குள்ள பாலாஜி கோயில் ஒன்று சுமார் 500 ஆண்டுகாலம் பழமைவாய்ந்தாக நம்பப்படுகிறது, இந்தக் கோயிலின் மீது நம்பிக்கையுடைய சிலர் சூட்டியுள்ள மற்றொரு பெயரே 'விசா கோயில்'


தற்போது டிரம்பின் தடையை தொடர்ந்து தினமும் தெலுங்கர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பிற மாநில இந்தியர்களும் தினசரி வருகை தந்து தங்களுடைய பாஸ்போர்ட், விசா விண்ணப்பப் படிவங்கள் உட்பட பல ஆவணங்களையும் வைத்து வழிபாடு நடத்தினால் அமெரிக்கா விசா கிடைக்கும் என நம்புகின்றனர். ஒரு சிலருக்கு எதார்த்தமாக கிடைத்த விசாக்களை கூட இந்த வழிபாட்டுடன் தங்கள் நம்பிக்கையை கலந்து முடிச்சுப் போட்டுக் கொண்டுள்ளனர்.

இதை நம்பாதவர்களை நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ' யூ ஆர் ஆன்ட்டி இன்டியன்' என்று சொல்லவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் இது மூடநம்பிக்கையல்ல, எங்களின் ஆன்மீக நம்பிக்கை என்று வியாக்கியானமும் கொடுக்கத் துவங்கியுள்ளது.

என்ன இருந்தாலும் உங்கள் நம்பிக்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை ஆகையால் உங்கள் நம்பிக்கை உங்களுக்கு மட்டுமே சொந்தம்.....    But  Iam not  an ANTY INDIAN...... 




நன்றி; நக்கீரன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.