Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

தவறான தகவல்களை பரப்பினால் வழக்கு பதிவு செய்வோம்: பா.ஜ.க. தலைவருக்கு பினராயி விஜயன் எச்சரிக்கை


 தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் பா.ஜ.க. தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கக்கன்பாரா பகுதியை சேர்ந்த பிஜூ(வயது34) என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவர் சில தினங்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிஜூவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க.வினர் இந்த கொலையை கண்டித்து கண்ணூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பிஜூவின் கொலையை மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் கொண்டாடுவது போன்ற வீடியோவை காட்டி இந்த குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது குறித்து ஆளுநரிடம் முறையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால், கண்ணூர் மாவட்டத்தை பதற்றமான பகுதியாக அறிவித்து, அங்கு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தேவைப்பட்டால் தவறான தகவல்களை பரப்பி வரும் பா.ஜ.க. மாநில தலைவர் கும்மனோம் ராஜசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜயன் கூறுகையில், “இது தவறானது மற்றும் சட்டவிரோதமானது. எங்கு அந்த கொண்டாட்டம் நடைபெற்றது என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.