Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 29, 2017

தவளைகள் அழிவு! சுற்றுப்புறச் சூழலுக்கு ஊதப்படும் அபாயச் சங்கு! ஏன் தெரியுமா?


சமீபகாலமாகவே சுற்றுப்புற சீர்கேட்டால் சிறு சிறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன. செல்போன் டவர் வருகையால் சிட்டுக்குருவி இனம் அழிவின் விழிம்பில் உள்ளது. அதேபோல் தற்போது அந்த லிஸ்டில் தவளை இனமும் சேர்ந்துள்ளது.

முன்பெல்லாம் குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், மழைக்காலங்களில் தெருக்களில் கூட தவளை அதிகளவில் காணப்படும். ஆனால் இப்போது பெய்த கோடை மழையில் அவைகளை காண முடியவில்லை.


ஆம்! தவளையைத்தான் காணவில்லை. தவளை கத்தினால் மழை வரும் என கிராமத்தில் ஒரு பேச்சு உண்டு. கழிவு நீர் கால்வாய்களில், மர இடுக்குகளில் வசித்து வந்தவை காணாமல் போய்விட்டது.

நகர்ப்புறங்களில் சிறிய வகை பிளாஸ்டிக் பைகளில் வந்த ஷாம்புக்கள், வாசனை சோப்புகள், குளியலறை, கழிவறை கழுவ பயன்படும் ஆசிட், பெனாயில், ரசாயனங்கள், பாத்திரம் கழுவபயன்படும் ரசாயன திரவங்களால் தவளை இனம் நகர்ப்புறங்களில் அழிந்து விட்டது.

இவை சிறு பூச்சிகள், கொசுக்களை விரும்பி உண்ணும். அதனால் தான் கொசுக்கள் எண்ணிக்கை மிக அதிகம் , மேலும் கொசு கடிப்பதால் சிக்குன்குன்யா, டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் மனிதர்கள் உயிரிழப்பு அதிகமாகி விட்டது.

தவளைகள் சாலையைக் கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அரிய வகை  தவளைகள் உள்ளது. பாம்புகளை விழுங்கும் தவளைகள் உண்டு.

தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து என ஊதப்படும் அபாயச் சங்கு. பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையால் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டே படைக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் வேகமான உலகத்தில் அனைத்தும் ரசாயனம் கலந்து பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். இதனால் என்னனென்ன விளைவுகள் வரும் என்றும் யோசிக்க கூட நேரம் இல்லை. அதனால் புது புது வியாதிகள் எல்லாம் வருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.